கொழும்பு ஹோட்டலில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக படம்பிடித்த இலங்கை U19 கிரிக்கெட் வீரர்கள் கைது !!
மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அறைகளில் குளித்துக் கொண்டிருந்த போது, கையடக்கத் தொலைபேசிகள் மூலம் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டதாக அவர்கள் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்கள்:
ஆண்களும் இலக்கு: குறித்த இரு வீரர்களும் பெண்களை மட்டுமன்றி, அதே இடத்தில் தங்கியிருந்த ஆண்களையும் ரகசியமாக வீடியோ எடுத்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இணையத்தில் கசிந்ததா?: இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா அல்லது வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளனவா என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அளுத்கடை நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 கருத்துகள்
மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் சிறப்பான பதிவு அண்ணா நன்றி ❤️
பதிலளிநீக்கு