Latest Updates

6/recent/ticker-posts

IPLஇல் புதிய சர்ச்சை! ரியான் பராக்கிற்கு அபராதம் !!

 

PBKS vs RR: போட்டியின் போது வேப்பிங் செய்ததற்காக ரியான் பராக்கிற்கு அபராதம்


நியூ சண்டிகரில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) இடையிலான IPL 2026 போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் வீரர்கள் உடைமாற்றும் அறையில் வேப்பிங் (vaping) - மின்னணு (e-cigarrette) புகைப்பிடித்தல் செய்ததற்காக பிசிசிஐ (BCCI) அபராதம் விதித்துள்ளது.

ரியான் பராக்கின் இந்த செயல், IPL நடத்தை விதிகளின் 2.21வது பிரிவை மீறுவதாக BCCI தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிரிவு, கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களைக் கையாள்கிறது. போட்டியின் நடுவர் அமித் ஷர்மா, ரியான் பராக்கின் செயலுக்கு 25 சதவீத அபராதமும் ஒரு டிமெரிட் புள்ளியும் விதித்தார். 

ரியான் பராக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, நடுவர் வழங்கிய தண்டனையை ஏற்றுக்கொண்டார்.



முன்னதாக வேப்பிங் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. BCCI தனது அறிக்கையில், "ஐபிஎல்லின் நற்பெயரை சீர்குலைக்கக்கூடிய எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகள் மற்றும் வீரர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க BCCI ஆராய்ந்து வருகிறது" என்று கூறியுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான போட்டியின் போது, Dug Outடில் மொபைல் போனை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம், IPL விதிகளின் 4.1.1வது பிரிவை மீறுவதாக IPL ஊழல் தடுப்பு பிரிவு கண்டறிந்தது. பிந்தர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். BCCI பிந்தருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்