Latest Updates

6/recent/ticker-posts

ஒழுக்கமும் அணி கலாசாரமும் முக்கியம்: சங்கக்காரா ரியான் பராக்கிற்கு நினைவூட்டல்!

 ஒழுக்கமும் அணி கலாசாரமும் முக்கியம்: சங்கக்கார ரியான் பராக்கிற்கு நினைவூட்டல்!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கார, அணியின் தலைவர் ரியான் பராக்கின்  வேப்பிங் (vaping) செய்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அணியின் கலாசாரம் மற்றும் ஒழுக்கத்தை வீரர்கள் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் நினைவூட்டியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது Dressing ரூமில் வேப்பிங் செய்ததற்காக ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் IPL ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

குமார் சங்கக்கார மேலும் கூறுகையில், "அணியின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை வீரர்கள் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த சீசனில் களத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், களத்திற்கு வெளியே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. முன்னதாக, ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான போட்டியின் போது அணியின் மேலாளர் ரோமி பிந்தர் டக் அவுட்டில் மொபைல் போனை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.

குமார் சங்கக்கார மேலும், "இந்த சர்ச்சைகள் அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. பிசிசிஐ (BCCI) மற்றும் அணி நிர்வாகம் இந்த பிரச்சனைகளை கையாண்டு வருகிறது."

அடுத்த போட்டி குறித்து சங்கக்கார, "டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்களின் தற்போதைய form மோசமாக இருப்பது போல் தெரிந்தாலும், அவர்கள் சிறந்த அணியாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்."

ரியான் பராக்கின் பஞ்சாப் அணிக்கு எதிரான சிறிய இன்னிங்ஸ் குறித்து சங்கக்கார கூறுகையில், "அவரது சிறிய இன்னிங்ஸ் அணியின் வேகத்தை மாற்றியது. ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப அவரது ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது."

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் முகாமையாளர் மீது BCCI கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஐபிஎல்லின் நற்பெயரை சீர்குலைக்கக்கூடிய எந்தவொரு செயலுக்கும் எதிராக BCCI கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பது இந்த சம்பவங்கள் மூலம் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்