Latest Updates

6/recent/ticker-posts

ICC T20I தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!

 ICC T20I தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!




சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹராரேயில் நடைபெற்ற இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 எனத் தொடரைக் கைப்பற்றிய நிலையில், நடப்பு T20 உலகச் சாம்பியனான இந்தியா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
மூன்றாவது போட்டியிலும் நேற்று இந்தியா வெற்றி பெற்றது.

முன்னதாக, அயர்லாந்துக்கு எதிராக 0-2 எனத் தொடரை இழந்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-4 எனத் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் இந்திய அணி தனது முதலிடத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்திருந்தது.

இருப்பினும், சிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியில் 90 ஓட்டங்களாலும் அபார வெற்றி பெற்று மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
புதிய தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் இந்தியா அடைந்த முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.

துடுப்பாட்டவீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசை நிலை:

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் 892 புள்ளிகளுடன் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.

அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 858 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தானின் ஷஹிப்சதா பர்ஹான் மூன்றாமிடத்திலும் அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சோல்ட், இலங்கையின் பத்தும் நிசங்க ஆகியோர் தொடர்கின்றனர்.

பந்துவீச்சு தரவரிசை:
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையின் 'முதல் 10' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரரான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தற்போதைய சிம்பாப்வே தொடரில் பங்கேற்காத போதிலும் 683 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.

முதலாவது இடத்தில் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் நிலைத்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அப்ரார் அஹமட், இங்கிலாந்தின் அடில் ரஷீத் ஆகியோர் இருக்கின்றனர்.
இலங்கையின் வனிது ஹசரங்க தற்போது எட்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

T20 சகலதுறை வீரர்களின் பட்டியில் முதலிடத்தில் சிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராசா நீடிக்கிறார்.

முழுமையான விவரங்கள் படங்களில்...





கருத்துரையிடுக

0 கருத்துகள்