Latest Updates

6/recent/ticker-posts

சத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை ! கெயில் படைத்த சாதனையைத் துரத்துகிறார்.


இதுவரை காலமும் T20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள கிறிஸ் கெயிலின் சாதனையை விடாமல் துரத்தி வரும் நியூசீலாந்தின் முன்னாள் வீரர் பிரெண்டன் மக்கலம் நேற்று கெயிலுக்குப் பிறகு 9000 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பிரெண்டன் மக்கலம் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இம்முறை பஞ்சாப் அணிக்காக ஆடும் கெயில் பதினோராயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளார். மக்கலம் 9000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதில் நியூசீலாந்து அணிக்காக 2140 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அடுத்த இடத்தில் தற்போது 8000 ஓட்டங்களைக் கடந்துள்ள மேற்கிந்தியத் தீவுகளின் கிரோன் பொல்லார்ட் இருக்கிறார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்