Latest Updates

6/recent/ticker-posts

IPL 2026: 15 வயது சிறுவனை சீண்டிய ஜெமிசன்; IPL நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

 

IPL 2026: 15 வயது சிறுவனை சீண்டிய ஜெமிசன்; ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

மே 2, 2026

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஆக்ரோஷமாக வழியனுப்பிய டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசனுக்கு IPL நிர்வாகம் தண்டனை விதித்துள்ளது.

சம்பவம் என்ன?

போட்டியின் போது, ஜெமிசனின் சிறப்பான யோர்க்கர் பந்தில் வைபவ் சூர்யவன்ஷி 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், ஜெமிசன் அந்த இளம் வீரருக்கு மிக அருகில் சென்று, கைகளைத் தட்டியவாறு ஆக்ரோஷமாக கத்தி வழியனுப்பி வைத்தார் (Send-off).

சமூக வலைத்தளங்களில் கண்டனம்:

ஜெமிசனின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. "அவருக்கு வெறும் 15 வயது தான் ஆகிறது, கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்றும், "இது உங்களது பலவீனமான ஈகோவையே காட்டுகிறது" என்றும் ரசிகர்கள் ஜெமிசனைச் சாடினர்.

IPL நிர்வாகத்தின் நடவடிக்கை:

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய IPL நிர்வாகம், கைல் ஜெமிசன் IPL நடத்தை விதிகளின் 2.5 பிரிவை மீறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

இதன் காரணமாக:

  • அவருக்கு உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • அவரது கணக்கில் ஒரு குறைபாடு புள்ளி (Demerit point) சேர்க்கப்பட்டுள்ளது.

எதிரணி வீரரை ஆக்ரோஷமாகத் தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என IPL
நிர்வாகம் இந்த நடவடிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்