Latest Updates

6/recent/ticker-posts

Akeal அதிர்ச்சி ! 'அனுபவ' அறிமுகங்கள் !!


அகீல் ஹொசைன் - சென்னையின் மும்பாய் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுக்களை எடுத்தவர் இன்றைய போட்டியில், சேப்பாக்கம் ஆடுகளத்தில் நடக்கும் போட்டிக்கு சென்னை அணியினால் தெரிவு செய்யப்படவில்லை !


கோடிக்கணக்காக வாங்கப்பட்ட பிரஷாந்த் வீர் 4 ஓவர்கள் பந்துவீசுவாரா என்று தொலைக்காட்சியில் கிரிக்கெட் விற்பனர்கள் கேட்கிறார்கள்.
இப்போது Power playக்குள் பந்துவீசக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
மூன்றாவது பந்தே சிக்ஸர் !
மூன்று சிக்ஸர்களை முதல் ஓவரிலேயே கொடுத்துவிட்டார்.

இன்றைய போட்டி நடக்கும் ஆடுகளம் T20 உலகக்கிண்ணப் போட்டியில் India vs Zimbabwe (256 ஓட்டங்களை இந்தியா எடுத்து 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய) போட்டி நடைபெற்ற ஆடுகளம்.

இதேவேளை மும்பாய் இன்று பந்துவீசும்போது Impact player ஆகக் களமிறக்கவுள்ள ரகு ஷர்மா, 33 வயதுடைய சுழல்பந்துவீச்சாளர்.
இம்ரான் தாஹீரை தன் மானசீகக் குருவாகக் கொண்ட leg spinner.

மிக நீண்ட போராட்ட்த்தின் பின் தனது கனவு இலக்கை அடைந்திருக்கிறார்.
பஞ்சாபில் பிறந்து அங்கே தனது முதற்தர அறிமுகத்தைப் பெற்றாலும் வாய்ப்புக்கள் இல்லாததால் புதுச்சேரிக்காக ஆடி, பின் சில காலம் நம் நாட்டில் காலி அணிக்காகவும் முதற்தரப்போட்டிகளில் ஆடிய பின் இப்போது மீண்டும் பஞ்சாப் அணியில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்.

மும்பாய்க்கு இரண்டு சுழல்பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் தேவைப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், Power play இலும் சிறப்பாக பந்துவீசும் உலகின் சிறந்த சுழல்பந்துவீச்சாளரில் ஒருவரான அகீல் ஹொசைன் சென்னை அணியினால் தெரிவுசெய்யப்படாதது எனக்கென்றால் ஆச்சரியமில்லை. அவருடன் இன்று Sarfaraz Khanஉம் இல்லை.

இந்தப் பருவகாலம் முழுக்க CSK இப்படித்தானே?

இன்றைய முடிவு ஏதாவது யுக்தியா ?
போட்டியின் முடிவு சொல்லக்கூடும் !

ஆனால் இன்றைய் CSK அறிமுகம் ராமகிருஷ்ணா கோஷ், எதிர்பார்க்கவைக்கிறார்.
அணித் தலைவர் கெய்க்வாட் போல மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
'குட்டி' ஹர்டிக் பாண்டியா என்கிறார்கள் (Auraவில் அல்ல)
பயனுள்ள வேகப்பந்துவீசும் சகலதுறை வீரராம்.
(சாயலில் நம்ம ராகம ரம்போ - பினுர பெர்னாண்டோ போல இருக்கிறார்)
பார்ப்போம்..

#CSKvsMI #ipl2026 #ChennaiSuperKings

கருத்துரையிடுக

0 கருத்துகள்