ஐரோப்பிய டி20 லீக்: ரொட்டர்டாம் அணியை வாங்கிய தென்னாப்பிரிக்க நட்சத்திரங்கள் !
புதிதாகத் தொடங்கப்படவுள்ள ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் (ETPL) நெதர்லாந்தின் ரொட்டர்டாம் (Rotterdam) அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் ஃபாஃப் டு பிளெஸ்ஸி, ஜொண்டி ரோட்ஸ் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர்.
அணியின் இணை உரிமையாளரான முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தொடக்க சீசனில் ராட்டர்டாம் அணிக்குத் தலைமை தாங்குவார்.
இது டு பிளெஸ்ஸி அணி உரிமையாளராக இருக்கும் முதல் அனுபவமாகும்.
ETPL தொடரில் ரொட்டர்டாம் தவிர, ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), டப்ளின், பெல்ஃபாஸ்ட் (அயர்லாந்து), எடின்பர்க், கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) ஆகிய நகரங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கும்.
இந்தத் தொடர் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை ஆறு ஐரோப்பிய நகரங்களில் நடைபெறும்.
இந்த லீக்கில் ஸ்டீவ் வோ, க்ளென் மக்ஸ்வெல், கைல் மில்ஸ், நேதன் மெக்கல்லம் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் அணிகளின் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.
- பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ETPL இன் இணை உரிமையாளர் ஆவார்.

0 கருத்துகள்