ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மே 9ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் முழுமையான இளஞ்சிவப்பு நிற (All-Pink) சீருடையை அணிந்து விளையாடவுள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அறக்கட்டளை இணைந்து முன்னெடுக்கும் '#PinkPromise' எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் மாற்றங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தச் சிறப்புப் போட்டியின் போது வீரர்களால் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் (Six), ராஜஸ்தானில் உள்ள 6 வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அந்த அணி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தற்போதைய ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளதுடன், Playoff சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பிலும் பலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்