இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், டி20 போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் துபாய்க்கு தாமதமாக வந்து சேர்வார்கள் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் போட்டியில் காலமதாமதாக களமிறங்கபோகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு மேல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஏஜஸ் பெளலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான காலத்தில் 3 டி20 போட்டிகள் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்ர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி காலத்தில் 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ஐபிஎல் வீரர்கள், போட்டி முடிந்தவுடன் துபாய் புறப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து குறிப்பிட்ட ஐபிஎல் வீரர்கள் செப்டம்பர் 17, 18 தேதிகளில் துபாய்க்குப் புறப்படுவர்.
துபாய் சென்றடையும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நபர் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
அதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க உள்ள டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 29 வீரர்கள் முதல் 3 ஐபிஎல் போட்டிகளை தவறவிட நேரிடும்.
ஜோஸ் பட்லர், ஸ்மித், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் 3 போட்டிகளை விளையாட வேண்டிய நெருக்கடி ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி லண்டன் சென்றடைகின்றனர்.
0 கருத்துகள்