Latest Updates

6/recent/ticker-posts

இங்கிலாந்தின் 1000வது டெஸ்ட் !! - டெஸ்ட் முதல் நிலை இந்தியாவை வீழ்த்தக் குறி வைக்கிறது

உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள உலகின் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. தற்போது டெஸ்ட்  தரப்படுத்தலில் முதலாமிடத்தில் உள்ள இந்திய அணிக்கும் அண்மைக்காலத்தில் சகலவிதமான போட்டிகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான மோதல் இது.

ஐந்தாமிடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்வதன் மூலம் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வதுடன் தமது முன்னேற்றம் நிலையானது என்பதைக் காட்டுவதற்கு ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இது.

இந்தியா எப்போதுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களில் தடுமாறி வரும் அணி என்பதனால் இம்முறையும் இங்கிலாந்து இந்திய அணியை உருட்டி எடுப்பதற்கான சகலவித உத்திகளோடும் தயார் நிலையில் இருக்கிறது.

நாளை போட்டி இடம்பெறவுள்ள எட்ஜ்பஸ்டன் ஆடுகளம் வேகப்பந்துக்கும் ஸ்விங் + எகிறலுக்கும் உதவக்கூடியது போலவே தெரிகிறது.


இங்கிலாந்து சர்வ நம்பிக்கையோடு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் + மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் என்று அடுக்கியிருக்கும் அதேவேளை மூன்று வருடங்களுக்குப் பிறகு பல சர்ச்சைகளோடு நம்பிக்கையோடு அணியில் சேர்க்கப்பட்டுள்ள அடில் ரஷீட்டுடன் பதினொருவர் கொண்ட முழுமையான அணியையே அறிவித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய ரஷீட், விராட் கோலியை வீழ்த்திய அந்த மாயாஜால பந்து ஒன்றே அவரை மொயின் அலியைத் தாண்டி அணிக்குள் வந்துள்ளார்.

போதாக்குறைக்கு பல சுழல்பந்துவீச்சாளர்களை வைத்து விசேட பயிற்சிகளும் எடுக்கிறார்கள்.
இங்கிலாந்து தனது வியூகத்தில் குறியாக உள்ளது.

அதுவும் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி.
டெஸ்ட் வரலாற்றில் முதல் அணியாக ஆயிரமாவது டெஸ்ட் போட்டிகளை எட்டிப்பிடிக்கும் முதல் அணி இங்கிலாந்து.

எனவே அந்த மகத்தான மைல்கல் போட்டியை எப்படியாவது வென்றாகவேண்டும் என்று சகலவிடயங்களையும் தயார்ப்படுத்தியுள்ளது.

இந்தியா இன்னும் இறுதி பதினொருவர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தாத அதே நேரம், கோலியும் ரவி சாஸ்திரியும் இந்திய அணியை வெளிநாட்டு மண்ணிலும் தொடர்ந்து வெல்கின்ற ஒரு அணியாக மாற்றவேண்டும் என்ற விடாப்பிடியான நம்பிக்கையோடு களமிறங்கவுள்ளனர்.
கோலியின் தன்னம்பிக்கையும் எந்த ஆடுகளங்களிலும் சோபிக்கக்கூடிய அணியாக ஒருநாள் போட்டிகளில் மாற்றியதை போல டெஸ்ட்டிலும் மாற்ற எண்ணியுள்ளதும் சேர்ந்து இந்தியாவும் முன்னைய அணிகள் போல இலகுவாகத் தோற்றுவிடாது என்றே தோன்றுகிறது.

துடுப்பாட்ட வரிசை ஓரளவு உறுதியான போதும் இந்தியா இரண்டு சுழல்பந்துவீச்சாளர்களோடு ஆடுமா? அதில் யார் யார் சேர்க்கப்படுவார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள்.
இப்போதைக்கு

கருத்துரையிடுக

0 கருத்துகள்