Latest Updates

6/recent/ticker-posts

IPL 2026: CSKயிடம் வீழ்ந்த மும்பை - Play Off வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

 

IPL 2026: CSKயிடம் வீழ்ந்த மும்பை - Play Off வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 2) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்ததன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் Play off கனவு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 7 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மாத்திரம் பெற்றுள்ள அந்த அணி, -0.803 என்ற மிக மோசமான நிகர ஓட்ட விகிதத்தையும் (Net Run Rate) கொண்டுள்ளது.

மும்பை அணிக்கு இன்னும் வாய்ப்புள்ளதா?

தொடர் தோல்விகளால் துவண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேற்றப்படவில்லை. அந்த அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை எட்ட முடியும்.

இருப்பினும், இந்த 14 புள்ளிகள் Play Off சுற்றுக்கு முன்னேற போதுமானதா என்பது மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக, தற்போது 4-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏற்கனவே 12 புள்ளிகளுடன் பலமாக இருப்பதால், மும்பை அணியின் அடுத்தடுத்த நகர்வுகள் சவாலானதாகவே அமையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்