அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களால் விறுவிறுப்பான வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தமது விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. எனினும், ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய செட்டேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். புஜாரா 123 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்திய அணி 250 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் நாளின் முதல் பந்திலே மீதி இருந்த விக்கெட்டையும் பறிகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஜோஷ் ஹேசல்வூட் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், லியொன் மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சில் குறைந்த ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக முதலாவது ஓவரிலே ஆரோன் பின்ஞ்சின் விக்கெட் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனால், அவுஸ்திரேலிய அணியினர் தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு இந்திய அணியை விட 15 ஓட்டங்களால் பின்தங்கியிருந்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் டிரவிஸ் ஹெட் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இத்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதமும் இஷாந்த் ஷர்மா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.
இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் 6 பிடிகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா சார்பாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக பிடிகளை எடுத்த தோனியின் சாதனையை சமப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸில் பெற்ற 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆரம்பம் மற்றும் முன்வரிசை வீரர்களின் பங்களிப்புகளின் மூலம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 323 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் முறையே 71 மற்றும் 70 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நேதன் லயொன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
323 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் நிறைவில் 104 ஓட்டங்களுக்கு 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.
வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு மேலதிகமாக 219 ஓட்டங்களும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டிய நிலையிலும் இறுதி நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இரு அணிகளும் தத்தமது அணிகளின் வெற்றிக்காக மும்முரமாக செயற்பட்டனர்.
முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்தாலும் பந்துவீச்சாளர்கள் இறுதிவரை பொறுமையாகத் துடுப்பாடி தம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அழுத்தத்தை வழங்கியிருந்தனர்.
எனினும், இந்திய அணியின் பந்து வீச்சு ஆஸி வீரர்களின் துடுப்பாட்டத்தை விடவும் ஆதிக்கம் செலுத்தியதால் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதனால் இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஷோன் மார்ஷ் 60 ஓட்டங்களும் அணித்தலைவர் டிம் பெய்ன் 41 மற்றும் நேதன் லயொன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக பும்ரா, அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக புஜாரா தெரிவானார்.
இந்தியா அவுஸ்திரேலியாவில் பெற்ற ஆறாவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு அடிலெய்டில் 2003ஆம் ஆண்டுக்குப் பின் பெற்ற முதலாவது வெற்றியாகவும் அமைகிறது.
இவ்வெற்றியின் மூலம் விராட் கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இது வரையில் ஒரு போட்டியிலேனும் தோல்வியடையாத தலைவராக தனது சாதனையை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 20 போட்டிகளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோஹ்லி அவற்றில் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.
முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் இந்தியா நம்பிக்கையுடன் பேர்த் மைதானத்தில் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகிறது. அவுஸ்திரேலியா தங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்ற ஆடுகளத்தில் காத்திருக்கிறது.

0 கருத்துகள்