நாளை மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அதே அணியை ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் கட்டாயமாகச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடிலெய்ட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதைகள் மூலமாக இருவரும் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவின் இடத்தில் துடுப்பாட்ட வீரர் ஹனுமா விஹாரி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, நாளைய ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளருக்கு அதிக சாதகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதால், சிலவேளைகளில் புவனேஷ்குமார் அணியில் சேர்த்துக்கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியில்லாமல் துடுப்பாட்டத்தில் வலுவை அதிகரிக்கவும் ஒரு சுழற்பந்து வீச்சாளரையாவது வைத்திருக்கவும் விரும்பி ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்கவும் இடமுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

0 கருத்துகள்