Latest Updates

6/recent/ticker-posts

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவரானார் அசங்க செனவிரட்ன!

 தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவரானார் அசங்க செனவிரட்ன!


இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் 2026-2030 காலப்பகுதிக்கான புதிய தலைவராக அசங்க செனவிரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான தேர்தலில், 16 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றியை உறுதி செய்தார்.

தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரை 5 வாக்குகள் வித்தியாசத்தில் அசங்க தோற்கடித்தார். செயலாளர் நாயகமாக ரிப்தி பாஹ்மி மீண்டும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். பொருளாளர் பதவிக்கு நடைபெற்ற போட்டியில் அஜித் சியம்பலாபிட்டிய 17 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த புதிய நிர்வாகத் தெரிவின் மூலம், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு இலங்கையின் ஒலிம்பிக் விளையாட்டுத் துறையை வழிநடத்தும் பொறுப்பு அசங்க செனவிரட்ன தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்