இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் பாகிஸ்தானின் சுழல்பந்து ஜாம்பவான் முஷ்டாக் அஹமட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
1992இல் உலகக்கிண்ணத்தை பாகிஸ்தான் வென்றபோது மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய பாத சுழல் பந்துவீச்சாளரான (leg spinner) முஷ்டாக் பின்னாளில் பாகிஸ்தான் மட்டுமன்றி இங்கிலாந்து அணியினதும் சுழல்பந்து பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார்.
முஷ்டாக் அஹமட் பாகிஸ்தான் அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகள், 144 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதோடு 346 சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய சுழல்பந்து வீச்சாளர்கள் தடுமாறி வரும் சூழ்நிலையில் முஷ்டாக்கின் வருகை இலங்கை அணியைப் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
0 கருத்துகள்