Latest Updates

6/recent/ticker-posts

சென்னைக்குத் தடை ! போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போட்டிகள் மாற்றம் !! #IPL2018

கடந்த செவ்வாய் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற IPL போட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் ஆறும் பூனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதுமாத்திரமின்றி சென்னையில் IPL போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்ததுடன், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனால் வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போட்டிகளை எவ்வித பிரச்சினைகளும் இல்லாம் நடத்திச் செல்வதற்காகவும் மிகு உள்ள 6 போட்டிகள் பூனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பூனே தவிர ராஞ்சி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்கள் பரிசீலனையில் இருந்தபோதும் கடந்த இரு ஆண்டுகளாக தோனியும் CSK பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் சேர்ந்து பணியாற்றிய ரைசிங் பூனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் சொந்த இடமான பூனேவுக்கு மாற்றுவது உசிதமானது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் பதிவிட்டுள்ளது.




இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.பி.எல். தலைவர் ராஜுவ் சுக்லா,

“ சென்னையில் நடத்தப்படும் போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் மிகுதி உள்ள போட்டிகள் பூனேவுக்கு மாற்றப்படுகிறது. காவேரி மேலாண்மை வாரியம் பிரச்சினை தீரும் வரை போட்டிகள் சென்னையில் நடைபெறாது” என அறிவித்துள்ளார்.

இது ஏற்கெனவே இரண்டாண்டுகளாக சென்னை அணியையும் IPL போட்டிகளையும் இழந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுப் பலத்துடன் விளையாடும் வாய்ப்பை இழப்பது பற்றித் தமது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை G.பிரசாத் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்