சுரேஷ் ரெய்னா இல்லை !!! சென்னை அணிக்கு மற்றொரு பேரிழப்பு - #CSK #IPL2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுரேஷ் ரெய்னா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது, கெண்டைக்கால் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்தார்.
இந்நிலையில் குறித்த உபாதை குணமாவதற்கு ஒருவாரம் அளவிலான காலப்பகுதி தேவையென்பதால், அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி அடுத்து நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ரெய்னா விளையாட மாட்டார்.
இவருக்கு பதிலாக விரல் உபாதையிலிருந்து மீண்டுள்ள தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஃபஃப் டுபிளசிஸ் அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதுடன், தமிழக வீரர் முரளி விஜயும் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கேதர் ஜாதவ் ஏற்கனவே முதற்போட்டியுடன் உபாதையால் அணியிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜாதவினால் இந்த ஐபிஎல் பருவகாலம் முழுவதும் விளையாடமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை G.பிரசாத் 

கருத்துரையிடுக

புதியது பழையவை