தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Tuesday, April 3, 2018

3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத்தை நிரூபித்த பாகிஸ்தான்

அடுத்தடுத்த மூன்றாவது நாளாக இன்றிரவு நடைபெற்ற T20 போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிகொண்டு வெள்ளையடிப்பு செய்துள்ளது சப்ராஸ் அகமதின் பாகிஸ்தான் அணி.


இதன் மூலம் தனது T20 தரப்படுத்தலின் முதலிடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கியமான பல வீரர்கள் இல்லாமல் ஜேசன் மொஹமட்டின் தலைமையில் வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலிரண்டு போட்டிகளை விட இன்று அதிகமாக ஓட்டங்களைப் பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடி 153/6.
ஃப்ளெட்ச்சர் 52, ரம்டின் 18 பந்துகளில் மூன்று சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 42.

எனினும் முதலிரு போட்டிகளில் 200 ஓட்டங்களைக் கடந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த ஓட்ட எண்ணிக்கையைக் கடப்பது எவ்வகையிலும் சிரமமாக இருக்கவில்லை.
16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

ஃபக்கார் சமானின் அதிரடி - 17 பந்துகளில் 40, பாபார் அசாமின் அரைச்சதம் என்பவற்றோடு, இந்தத் தொடரில் அறிமுகமான ஹுசைன் தலாத்தின் ஆட்டமிழக்காத 31உம் பாகிஸ்தானின் இலகுவான, மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்தது.

இன்றைய போட்டியின் நாயகனாக சமானும், தொடரின் சிறப்பாட்டக்காரராக பாபார் அசாமும் தெரிவாகினர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...