துடுப்பாட்ட சாதனைகள் அத்தனையையும் தன் வசப்படுத்திக் கொண்டு அசுர ஓட்டக்குவிப்பு எந்திரமாக மாறிவரும் விராட் கோலியையே ஒருவர் முந்துகிறார் என்பது எத்தகைய பெரிய ஆச்சரியம்.. பாகிஸ்தானின் பாபார் அசாம் தான் அந்தப் புதிய துடுப்பாட்டப் புயல்.
என்னென்ன கிரிக்கெட் துடுப்பாட்ட சாதனைகள் இருக்கோ, அத்தனையையும் முறியடித்துக்கொண்டே - குறிப்பாக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் - அனைத்து வகைப் போட்டிகளிலும் 50க்கு மேற்பட்ட சராசரியை வைத்துள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.
பாகிஸ்தான் அணியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சிறப்பான ஓட்டக் குவிப்பில் பிரகாசித்து வரும் இளம் துடுப்பாட்ட வீரர் பாபார் அசாம் குறுகிய வகைப் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில்) கலக்கி வருகிறார்.
நடந்த முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் போட்டி நாயகனாகவும் தெரிவான இவர், கடைசி இரு போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் முறையே 97 மற்றும் 51 ஆகிய ஓட்டப் பெறுதிகளைப் பெற்றுக்கொண்ட அசாம் T20 சராசரியில் கோலியை முந்தி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இனி கோலிக்கு ஒரு சரியான போட்டியாளர் தமது நாட்டிலிருந்து உருவாகி இருக்கிறார் என்று இப்போதே ஆரவாரிக்க ஆரம்பித்துள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.
தன் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு சுமையை எவ்வாறு தனது ஆட்டங்கள் மூலமாக லாவகப்படுத்துவார் பாபார் அசாம் என்று காத்திருந்து அவதானிப்போம்.
0 கருத்துகள்