பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு !
வீடு, வாகனங்கள் சேதம் !யாருக்கும் காயம், ஆபத்தில்லை !
சந்தேக நபர்கள் ஐவர் கைது !
நசீம் ஷா, இன்று (11) ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசத் தொடருக்காக பாகிஸ்தான் அணியோடு தற்போது ராவல்பிண்டியில் தங்கியிருக்கின்ற வேளையில் இந்தத் தாக்குதல் இனந்தெரியாதோரால் அவரது லோவர் டிர் மாவட்டத்திலுள்ள, மாயார் பகுதியிலுள்ள வீட்டில் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
வீட்டின் சில பகுதிகளுக்கும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் ஏற்பட்டபோதிலும் ஷாவின் குடும்பத்தவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.


0 கருத்துகள்