இந்திய-அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பேர்த்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி
"பேர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வெற்றி வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
உண்மையிலேயே அவுஸ்திரேலியா பேர்த் போன்ற, வேகமான எகிறும் பந்துகளுக்கு உகந்த அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.
எனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பேர்த் அந்த அணிக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் அதே அளவு சமமான வாய்ப்பு உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது.
ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். எங்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட திறமையோடு இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்."
இதனால் எகிறும் ஆடுகளமாக இருந்தாலும், வேகப்பந்துக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தாலும் கூட இந்தியாவுக்கு சாதகமாக பேர்த் அமையும் என்று நம்பிக்கையுடன் கூறினார் கோலி.
0 கருத்துகள்