Latest Updates

6/recent/ticker-posts

CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஏங்கினேன் - தினேஷ் கார்த்திக் - காணொளி

சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் பந்தின் சிக்ஸர் ஹீரோ தினேஷ் கார்த்திக் மனம் திறந்தபோது..

தனது கிரிக்கெட்டின் ஆரம்ப காலம் முதல் தமிழ்நாடு அணிக்காக மட்டுமே ஆடிவந்த போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் - CSK அணிக்காக விளையாடும் வாய்ப்பு தனக்கு எப்போதுமே கிடைக்கவில்லை எனக் கவலைப்பட்டுள்ளார்.
அவ்வாறு சென்னைக்காக விளையாடத் தான் ஏங்கியபோதும் ஆனால் தனக்கான அழைப்பு சென்னை Franchise பக்கம் இருந்து வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தனக்கான அணியைத் தெரிவு செய்வது தனது கையில் இல்லை என்றும் அழகான தமிழிலேயே கருத்துத் தெரிவ்த்திருந்தார் இப்போதைய Trending ஹீரோ கார்த்திக்.

இம்முறை IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தலைமை தாங்கவுள்ள கார்த்திக், தன்னுடைய திடீர் பரபரப்பு எழுச்சியினால் ரசிகர்களினால் இன்னும் அதிகமாகக் கவனிக்கப்படப் போகிறார்.

இதேவேளையில் இலங்கையில் இடம்பெற்ற போட்டிகளின்போது சக தமிழக வீரர்களான விஜய் ஷங்கர், வொஷிங்க்டன் சுந்தர் ஆகியோருடன் தமிழில் பேசிய காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

முழுமையான காணொளி :

கருத்துரையிடுக

0 கருத்துகள்