Latest Updates

6/recent/ticker-posts

அள்ளிக் கொடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் ! - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு வீரர்களுக்கு அழைப்பு

படம் : CricketCountry.com

பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட T-20 தொடருக்குச் செல்லும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு மேலதிகமாக 25 ஆயிரம் டொலர்கள் கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் வழங்கப்படாத வீரர்கள் அணியில் இணைக்கப்படுவார்களாயின் அவர்களுக்குக் குறித்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cricket West Indies (CWI) 

என்று அழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தொடருக்கான 13 பேர் அடங்கிய குழுவை அறிவிக்கவுள்ளது. இந்த குழாமில் அடங்குகின்ற அனைத்து வீரர்களுக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்படவுள்ளது.

அதிலும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள வீரர்களுக்கு, இந்த தொடர் இரு மடங்கு வருமானத்தை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 70 சதவீதம் அதிகமான பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு ஒரு T -20 போட்டியில் விளையாடுவதற்கு கிரிக்கெட சபையால் 1725 அமெரிக்க டொலர்களிலிருந்து 5000 டொலர்கள் வரையில் வழங்கப்படுகிறது.
இதன்படி பாகிஸ்தானில் விளையாடினால் மூன்று போட்டிகளுக்கு 25000 டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தானில் நடத்தப்படும் இந்த தொடரானது ஐசிசியின் வருடாந்த போட்டி பட்டியலில் உள்ளடக்கப்படாததால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பணத்தினை வழங்கும். குறித்த தொகையை வீரர்களுக்கு வழங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்