தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 19 மார்ச், 2018

ஒரே பந்தில் உலக கிரிக்கெட் ஹீரோவான தினேஷ் கார்த்திக் !!

‘புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்தார்’ : புகழ் மழையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் !!


இந்திய அணியில் மொஹீந்தர் அமர்நாத்துக்குப் பிறகு அதிகமுறை அணிக்குத் திரும்பி வந்தவர் என்ற பெயர் பெற்ற தினேஷ் கார்த்திக் நேற்று தான் ஏன் அணியில் முக்கியமான ஒரு அங்கம் என்பதை நிரூபித்தார்.

அவர் இறங்கும் போது 2 ஓவர்களில் 34 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலை, பயங்கர அழுத்தம், வெற்றி பெற முடியவில்லை என்றால் வசை, ஏமாற்றம் அனைத்தையும் சுமந்திருப்பார் கார்த்திக், ஆனால் அவரது கடின உழைப்பு இறங்கியவுடனேயே ஒரு 8 பந்துகளை மட்டையின் நடுவில் வாங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான் ஒரு விதத்தில் ப்ளே என்றவுடன் சாத்தத் தொடங்குவது போல்தான் தினேஷ் கார்த்திக் ஆட்டம் அமைந்தது.


இத்தகைய மந்தமான பிட்சில் ரூபல் ஹுசைன் போன்ற ஆக்ரோஷமான திறமையான வீச்சாளரை 6 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது சாதாரண விஷயமல்ல. எதிர்முனையில் இருந்த இன்னொரு தமிழ்நாட்டு வீரரான விஜய் சங்கர் மட்டையிலிருந்து காற்று வந்து கொண்டிருந்த நிலையில் அவரையும் தன் இன்னிங்ஸினால் காப்பாற்றினார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில் ட்விட்டரில் அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.

சச்சின் டெண்டுல்கர்:

அபாரமான வெற்றி! தினேஷ் கார்த்திக் சூப்பர்ப் பேட்டிங், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் கிரேட் இன்னிங்ஸ்! இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான பினிஷிங்!

பயிற்சியாளர் ரவிசாஸ்திரி:

No game is over till the fat lady sings. DK, you beauty! No game is over

யுவராஜ் சிங்:

யூ பியூட்டி தினேஷ் கார்த்திக்.

மொகமத் கயீஃப்

தினேஷ் கார்த்திக் உண்மையிலேயே பரபரப்பான பேட்டிங். நீண்ட நாட்களுக்கு நினைவு வைக்கும்படியான இன்னிங்ஸ். நீண்ட காலமாக இருக்கிறார். சோதனைகளைக் கடந்தார். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதை நிரூபித்தார். இது கார்த்திக் கணம்.

மைக்கேல் வான்:

29 ரன்கள் 8 பந்துகளில், கடைசி பந்தில் சிக்சரில் வெற்றி, முறையான பினிஷிங்.

ஆஞ்சேலோ மேத்யூஸ்:

அருமையான கிரிக்கெ ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, டஃப் லக் பங்களாதேஷ்.

மிட்செல் மெக்லினாகன்:

8 பந்துகளில் 29 ரன்கள்! அனைத்து காலங்களிலும் சிறந்த பினிஷிங் இன்னிங்ஸ் ஆக நினைவில் இடம்பெறும்.

சுரேஷ் ரெய்னா:

வலையில், களத்தில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், நாங்கள் அணியைக் கட்டமைக்கிறோம். அணிக்கு வாழ்த்துக்கள், பெருமையாக உள்ளது, மிகப்பிரமாதமான இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக், ரோஹித்.

சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண் ஆகியோரும் தினேஷ்கார்த்திக்கை புகழ்மழையில் நனைத்தனர்.

யூசுப் பத்தான்:

வெல் டன் டீம் இந்தியா! என்ன ஒரு பிரமாதமான வெற்றி! நெருக்கடி தருணத்தில் என்ன ஒரு இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக். இளம் வீரர்கள் இந்தத் தொடரில் அற்புதமாக ஆடிவிட்டனர்.

ராஜீவ் சுக்லா: அருமையான போட்டி, என் பார்வையில் ஒட்டுமொத்த பெருமைகளும் தினேஷ் கார்த்திக்குத்தான் போய் சேர வேண்டும். புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்தார் தினேஷ்.


நன்றி : 
தி இந்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...