ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிறைய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சிலர் தோனியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
அபுதாபியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. கடந்த சீசன் வரை வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பா் கிங்ஸ், இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் CSK அணி மோசமாக விளையாடி வருவதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் மகள் ஜிவா-வின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியிலான மிரட்டல்களை விடுத்துள்ளார்கள். அதேபோல தோனியின் மனைவி சாக்ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இவர்களில் ஜிவாவை பாலியல் பலாத்காரம் செய்வதாக கேவலமாக மிரட்டிய 16 வயது இளைஞர் ஒருவரை குஜராத் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது:
நம் தேசம் எங்குச் சென்றுகொண்டிருக்கிறது? தோனியின் 5-வது மகளுக்குப் பாலியல் ரீதியிலான மிரட்டல் விடுப்பது கொடுமையாக உள்ளது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தோனிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதி வருகிறார்கள்.#CSK
0 கருத்துகள்