மீண்டும் சொதப்பிய தோனி & சென்னை | விராட் கோலியின் விஸ்வரூபத்தில் வெற்றியீட்டிய RCB #RCBvCSK #IPL2020


 

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் ஃபிஞ்ச் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். வாஷிங்டன் சுந்தர் (10), ஷிவம் துபே (22) போன்றவர்கள் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.


மறுமுனையில் விராட் கோலி கடைசிவரை களத்தில் இருந்து 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்ததால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் சேர்த்தது.


170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துவக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் 14 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


அடுத்துக் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ஜெகதீசன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியனர். ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் மகேந்திரசிங் தோனி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் டக்-அவுட் ஆனார்.


கடைசி வரைப் போராடிய அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்களும் சிறப்பாக சோபிக்க தவறியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை