தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்!! #KXIPvRCB #IPL2020

 ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து கே. எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழும் கே.எல்.ராகுல், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக 

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடைத்து அசத்தியதுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆறு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 63 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்து குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தார். சச்சினின் இந்த சாதனையையே கே.எல். ராகுல் தற்போது முறியடித்துள்ளார்.


பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டி, கே,எல், ராகுலுக்கு 60 ஆவது ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியில் சதமடைத்ததன் மூலம் அவர் 2,000 ரன்களை கடந்தார். அத்துடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத்தள்ளி ராகுல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த முதல் 5 இந்திய வீரர்கள்:

கே.எல் ராகுல் (60), சச்சின் டெண்டுல்கர் (63), கௌதம் காம்பீர் (68), சுரேஷ் ரெய்னா (69), வீரேந்திர சேவாக் (70)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...