சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?
சுரேஷ் ரெய்னா எதற்காக நாடு திரும்பினார் என்பது பற்றி அணி நிர்வாகம் சரியான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. தற்போது துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காததால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகேந்திரசிங் தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காததால் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அவசரவசரமாக ரெய்னா நாடு திரும்பியதும் ஏனைய வீரர்களுடன் தோனி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தவுடன் தனது ஓய்வையும் ரெய்னா அறிவித்திருந்தார்.
எனினும் தோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெய்னா கொரோனா பயத்தினாலேயே தாம் சமாதானம் செய்து நிறுத்தியும் நாடு திரும்பியதாக தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
இதேவேளை சென்னை சூப்பர் கிங்க்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா வீணாக தனது சம்பளமான பெருந்தொகையை (இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாவை ) இழக்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா தொடர்ந்து மௌனம் சாதித்துவருவதால் சென்னை ரசிகர்கள் குழம்பியிருக்கிறார்கள்.
0 கருத்துகள்