பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களுக்கும் சர்ச்சைக்கும் அப்படியொரு இணைபிரியாப் பொருத்தம் ! அதிலும் இங்கிலாந்துத் தொடர் என்றால் சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் விடாமல் துரத்தும்.
முன்னைய தொடர்களில் பந்தை முறைகேடாக சேதப்படுத்தியது, போட்டி நிர்ணயம், பந்தயக்காரர்களுடன் தொடர்பு என்று சர்ச்சைகள் நீண்டுகொண்டே போகும்.
இப்போது லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியிலும் புதிய சர்ச்சையொன்று வெடித்திருக்கிறது.
இரண்டாவது நாளின் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் ஆதிக்கமே ஓங்கி இருந்தாலும், முதல் நாளில் கிளம்பிய இந்த சர்ச்சை இப்போது ICC - சர்வதேச கிரிக்கெட் பேரவை பகிரங்க அறிக்கை வெளியிடும் அளவுக்கு பேசப்படும் விடயமாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிக்கும் பிரிவினால் மைதானத்தில் விளையாடும் நேரத்தில் எந்தவொரு வீரரும் ஸ்மார்ட் கடிகாரங்களை அணியமுடியாதென்று அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் சூதாட்டத்தில் ஈடுபடலாம் (spot fixing), பந்தயக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற காரணங்களால் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மூன்று பாகிஸ்தானிய வீரர்கள் Apple smart watches - கடிகாரங்களை அணிந்து விளையாடியிருந்தனர்.
உடனடியாகவே இதைக் கவனித்த ICC முதல் நாள் ஆட்டமுடிவில் இதுபற்றி பாகிஸ்தானிய கிரிக்கெட் அணிக்கும் முகாமைத்துவத்துக்கும் அறிவித்திருந்தது.
அசாத் ஷபிக், ஹசன் அலி, பபார் அஸாம் ஆகிய வீரர்களே Apple ஸ்மார்ட் கடிகாரங்களை அணிந்திருந்த வீரர்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். எனினும் தமக்கு இந்த விதிமுறைகள் தெரியவில்லை எனவும் இனி அணிந்து விளையாடப்போவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கு மேலதிக நடவடிக்கை எதையும் ICC எடுக்காது என்று கருதப்படுகிறது.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக இங்கிலாந்து 184 ஓட்டங்களை எடுத்தது.

0 கருத்துகள்