IPL இல் மூன்றாவது கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற மகிழ்ச்சியை சென்னை ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடும் நேரத்தில் அந்த வெற்றியின் பங்காளர்களில் ஒருவரான ட்வெயின் பிராவோ சிறப்புப் பாடல் ஒன்றைக் காணொளியொடு வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார்.
We Are The Kings என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் புகழ் பாடப்பட்டுள்ளதோடு முன்பே எடுக்கப்பட்ட தோனி மற்றும் இதர சென்னை வீரர்களின் படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது வரிகள் மட்டும் கொண்ட lyrical video வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான காணொளியை சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
0 கருத்துகள்