மனைவியின் புகாரால் பல கோடிகளை இழந்த மொஹமட் ஷமி

இந்திய கிரிக்கெட் வீரர் - வேகப்பந்துவீச்சாளர்  மொஹமட் ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹாஸின் ஜெஹான்  கொடுத்த புகாரால் பல கோடிகளை இழக்கும் நிலையில் உள்ளார்.
ஷமியும் மனைவி ஹாஸின் ஜெஹானும் 
படம் : IBTimes India

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொஹமட் ஷமி மீது அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். அதில் ஷமி, அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதோடு ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இப்படி ஷமி மனைவியின் புகாரால் பிரச்னையில் இருந்து வருவதால் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே டெல்லி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.
காரணம், டெல்லி அணி ஷமியை விளையாட விடலாமா?, வேண்டாமா என மறுபரிசீலனை செய்து வருகின்றது.

இந்தப் பிரச்னைகளால் BCCI அண்மையில் வெளியிட்ட சம்பள  ஒப்பந்தப் பட்டியலில் சமியின் பெயர் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு ஆண்டுக்கு 3 கோடி முதல் முதல் 5 கோடி (இந்திய ரூபாய்) வரை  கிடைத்திருக்கும்.

அதே போல் இந்த பிரச்சினை காரணமாக ஐபிஎல் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியில் விளையாட முடியவில்லை எனில் அவரை ஏலத்தில் எடுத்த 3 கோடி ரூபாய் கிடைக்காது.

இந்தக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பையும், நன்மதிப்பு நாசமாகப் போவதையும் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாழாவதையும் ஷமி எவ்வாறு தடுத்து நிறுத்தப்போகிறார் என்பதையே அனைவரும் ஆர்வத்துடன் அவதானிக்கிறார்கள்.

1 கருத்துகள்

புதியது பழையவை