ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல வீரர்களைக் காயம் காரணமாக இழந்துள்ள, மாற்றங்களை செய்துள்ள உலக அணி நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் அணியின் தலைவரையும் மாற்றவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.
உலக அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஒயின் மோர்கனுக்கு வலது கை மோதிர விரலில் ஏற்பட்டுள்ள முறிவின் காரணமாக ஒரு வார காலமாவது ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே மோர்கன் நாளைய போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார்.
இதையடுத்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷஹிட் அஃப்ரிடி உலக அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோர்கனின் இடத்துக்கு இங்கிலாந்து அணியின் இளைய விக்கெட் காப்பாளர் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மோர்கன் எதிர்வரும் 10ஆம் திகதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னர் குணமடைந்து விடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரும் இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த வருடம் சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முகமாகவே இந்த T 20 கண்காட்சிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நாளை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
திரட்டப்படும் நிதி மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஐந்து மைதானங்களைப் புனரமைப்பு செய்யப் பயன்படும்.
x
0 கருத்துகள்