Latest Updates

6/recent/ticker-posts

மீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா? - Rajasthan Royals - #IPL2018

கடந்த 2016, 2017 சீசன்களில் விளையாடத்தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வருடத்திற்கான ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

 இது ராஜஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதோடு இம்முறையும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு அவுஸ்ரேலியாவின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் ஸ்டீவ் ஸ்மித்தே தலைமை தாங்கவுள்ளார் என்று எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் பேரிடியாக கடந்த சில நாட்களின் சம்பவங்கள் நடந்துமுடிந்த.விதம் அமைந்தது. அவுஸ்திரேலிய வீரர்களின் பந்தை வேண்டுமென்றே உருமாற்றி சேதப்படுத்திய மோசடி விவகாரத்தினால் ஸ்மித் தடை செய்யப்பட்டதுடன் இம்முறை IPL இல் விளையாடமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது இந்திய அணியின் மத்திய வரிசையின் நம்பகமான வீரர் அஜியாங்கே ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்முறை களமிறங்கவுள்ள ராஜஸ்தான் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என்பன எவ்வாறு உள்ளது? என்பது தொடர்பான ஒர் விரிவான அலசல்..

ராஜஸ்தான் அணி துடுப்பாட்டவரிசையை முதலில் பார்த்தால் இவ்வணிக்கு இம்முறை துடுப்பாட்டவரிசை பலமாக தான் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் துடுப்பாட்டவீரர் அஜிங்கே ரகானே, இங்கிலாந்தின் சகலதுறை வீரர், இம்முறை அதிகளவு ஊதியத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் அதிரடி விக்கெட் காக்கும் துடுப்பாட்டவீரர் ஜோஸ் பட்லர், மற்றும் கடந்த ஐபிஎல் சீசனில் முதலாவது சதம் பெற்ற சஞ்சு சாம்சன், இவர்களுடன் இந்தவருடம் நடைபெற்ற பிக்பாஷ் லீக் தொடரில்  தொடராட்டநாயகன் விருதை வென்ற அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவீரர் டார்சி ஷோட்டும் இவ்வணிக்காகவே விளையாடவுள்ளார். இதுவும்இவ்வணியின் துடுப்பாட்டவரிசைக்கு மேலும் பலம் சேர்க்கின்றது.
அத்துடன் தடைக்குள்ளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக இன்று பெயரிடப்பட்டுள்ள தென் ஆபிரிக்க அதிரடித் துடுப்பாட்ட வீரர், விக்கெட் காப்பாளர் ஹெயின்ரிச் க்ளாஸன்  எனவே இம்முறை களமிறங்கவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு துடுப்பாட்டவரிசை பலமாகவே தான் காணப்படுகின்றது.

ராஜஸ்தான் அணியின் சகலதுறைவீரர்களை பார்த்தால் இங்கிலாந்தின் நட்சத்திர சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ் இம்முறை இந்த அணிக்காக விளையாடவுள்ளார். இவர் இவ்வணிக்கு மிக மிகப் பெரும் பலமாக அமைவார். இவருடன் ஸ்ருவர்ட் பின்னி, அங்கிட் ஷர்மா, ஸ்ரேயாஸ் கோபால், மிதுன், ஜஸ்டின் சக்னா ஆகிய சகலதுறைவீரர்களும் இம்முறை இவ்வணிக்காகவே. விளையாடவுள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுவரிசையை வரிசை பார்த்தால் வேகப்பந்துவரிசையும் பலமாக தான் உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய இந்தியவீரர் ஜெயந்த் உனாட்கட் இம்முறை இவ்வணிக்காக விளையாடவுள்ளார். அத்துடன் தவால் குல்கர்ணியும் விளையாடவுள்ளார். அத்துடன் இந்தவருடம் நடைபெற்ற பிக்பாஷ் லீக்கில் கலக்கிய மேற்கிந்தியதீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் இவ்வணிக்கே விளையாடவுள்ளார். இவர்களுடன்   அவுஸ்ரேலியாவின் பென் லாப்லின், இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, மற்றும் இந்திய அணியின் இளம்வீரர்களான ஷகிர்கான், அனுரிட் சிங் ஆகியோரும் இவ்வணிக்காகவே விளையாடவுள்ளனர். அத்துடன் பென்டோக்ஸ் , ஸ்வர்ட் பின்னி போன்ற சகலதுறை வேகப்பந்துவீச்சாளர்களும் இவ்வணியின் வேகபந்துவீச்சுவரிசைக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள். ஆனால் மேற்கிந்தியதீவுகளின் ஆர்ச்சர் உபாதைக்குட்பட்டதால் இம்முறை ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியே.

ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை பார்த்தால் இவ்வணிக்கு சுழற்பந்துவீச்சு வரிசை மிக பலவீனமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இவ்வணியில் சர்வதேசப்போட்டிகளில் விளையாடிய ஒரு சுழற்பந்துவீச்சாளர் கூட இல்லை. இவ்வணியில் கிருஷ்ணப்பா கெளதம் எனும் சுழற்பந்துவீச்சாளரும் அங்கிட் ஷர்மா, ஸ்ரேயாஸ் கோபால், மிதுன், ஜஸ்டின் சக்னா போன்ற அனுபவமற்ற சகலதுறை சுழற்பந்துவீச்சாளர்களும் தான் உள்ளனர். இவர்களோடு அவுஸ்திரேலியாவின் ஷோர்ட்டிடம் இருந்து சில ஓவர்களை எதிர்பார்க்கும் அளவுக்கு மிகப் பலவீனமான சுழல்பந்து வீச்சுப் பக்கமே உள்ளது.

முதன்முறை நடந்த IPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பிறகு  கடந்த சீசன்களில் ராஜஸ்தான் அணி பெரிதாக சோபிக்கவில்லை. போட்டி நிர்ணயிக்க குற்றச்சாட்டின் பின்னர் மீண்டு இந்த வருடம் எழுந்து வரும் என்று எதிர்பார்த்தால் ஸ்டீவ் ஸ்மித்தின் இழப்பு பெரிதாகத் தாக்கியுள்ளது.
ஸ்டொக்ஸ் மற்றும் ரஹானே மீது மிகப்பெரும் நம்பிக்கைச் சுமையை வைத்துக்கொண்டு இம்முறை களமிறங்குகிறது ராஜஸ்தான்.
இவற்றைத் தாண்டி நம்பிக்கையுடன் இந்த சீசனிலாவது ராஜஸ்தான் றோயல்ஸ் அணி சோபிக்குமா?

தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்