Latest Updates

6/recent/ticker-posts

வருகிறது லங்கன் பிரீமியர் லீக் ! - சர்வதேசத் தரத்தில் இலங்கையின் கிரிக்கெட் கொண்டாட்டம்

ஸ்ரீலங்கன் பிரிமீயர் லீக் - SLPL  2012 இல் ஒரேயொரு தடவை நடந்த பின் அப்படியே கைவிடப்பட்டிருந்தது. நிதி நெருக்கடி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நெருக்கடி சிக்கல்கள் காரணமாக மீண்டும் ஒரு SLPL க்கு வாய்ப்பே இல்லாமல் போனது.

எனினும் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்த தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் முயற்சியினால் இவ்வருடம் முதல் ஓவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தில் ‘லங்கன் பீரிமியர் லீக்’ T20 தொடர் சர்வதேசத் தரத்தில் இலங்கையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் - குறிப்பாக இந்திய வீரர்களையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இலங்கைக்கு கிரிக்கெட் விடயங்களில் எப்போதும் ஒத்தாசையாக இருக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் ஒத்துழைப்பை SLC இது விடயமாக நாடியும் உள்ளது.

இந்த ‘லங்கன் பீரிமியர் லீக்’ T20 தொடரின் இயக்குனராக, இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரஸ்ஸல் ஆர்னல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.பி.எல் (IPL), பி.பி.எல் (BPL) , சி.பி.எல் (CPL) , பிக் பாஷ் லீக் (BBL - Big Bash League) ஆகிய தொடர்களை போல் இலங்கையிலும் பிரம்மாண்டமான முறையிலும் உலகளாவிய ரீதியில் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் நடத்தப்பட ‘லங்கன் பீரிமியர் லீக்’ (எல்.பி.எல்.) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய இக்கிரிக்கெட் தொடர், ஓகஸ்ட் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 10 வரை  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே இயக்குனர் பொறுப்பினை ரஸ்ஸல் ஆர்னல்ட் ஏற்றுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு தனது சர்வதேச ஓய்வுக்குப் பின்னர் 44 வயதான  ஆர்னல்ட், தற்போது சிட்னி நகரில் வசித்து வருகின்றார். சர்வதேச ரீதியிலான பல்வேறு லீக் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராகப் பணியாற்றிய அனுபவத்தோடு நேர்த்தியான முறையில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாகவும், வர்த்தக ரீதியில் லாபத்தைத் தரும் விதமாகவும் நடத்தித் தருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை அனைத்து மாகாண மட்ட இளையவரும் அனைத்து இனங்களை சேர்ந்த திறமையானவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்