மும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி !
மும்பாய் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் இந்த IPL இல் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பாய் இந்தியன்ஸினால் 5.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கமின்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாபவர்.
அண்மையில் தென் ஆபிரிக்காவில் நடந்துமுடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய இவர் உபாதைக்குள்ளாகி விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு கிரிக்கெட் அவுஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மும்பாய் சென்னைக்கு எதிராக முதலாவது போட்டியில் தோல்வி கண்டது. இதுவரை கமின்ஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கமின்ஸின் சக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்