தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 4 ஏப்ரல், 2018

புதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் ? - SunRisers Hyderabad - #IPL2018


இன்னும் சில தினங்களில் ஐபிஎல் 11ஆவது சீசன் ஆரம்பிக்கவுள்ளது. 

இந்நிலையில் இந்த சீசனில் களமிறங்கவுள்ள சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சு, களத்தடுப்பு போன்றவற்றை ஆராய்ந்து பார்க்க உள்ளோம்.


தென் ஆபிரிக்காவில் அவுஸ்திரேலிய அணியின் பந்து சேதப்படுத்தல் சர்ச்சையால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட அணியாக சன்ரைசர்ஸ் அணியே காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் SRHக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த டேவிட் வோர்னர் தான் தலைவராகவும் கடமையாற்றி 2016இல் IPL கிண்ணத்தையும் வென்று கொடுத்திருந்தார். இப்போது வோர்னர் தடைக்குள்ளாகி இருப்பதால் தலைவராக நியூசீலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் வோர்னர் கொடுக்கும் அந்த அதிரடி ஆரம்பம் இன்மை என்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே.

சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை முதலில் பார்த்தால் இம்முறை கடந்த சீசன்களிலும் பார்க்க பலமான துடுப்பாட்டவரிசையை இவ்வணி கொண்டுள்ளது. ஏனெனில் கடந்த சீசன்களில் வோர்னர் ஒருவரே தனித்து நின்று ஒட்டங்களை சேர்ப்பார். அதானால் இவ்வணி குறைவான ஓட்ட இலக்கையே நிர்ணயிக்கும். ஆனால் இம்முறை சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்டவரிசை பலமாகிவுள்ளது. குறிப்பாக தற்போது ஷிகர் தவான், கேன் வில்லியம்ஸன் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட போம்மில் உள்ளனர் இது சன்ரைசஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்றது. அத்துடன் வோர்னருக்குப் பதிலாக அழைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், மனிஷ் பாண்டே, ரிதிமன் சகா, ரிச்சி புவி, சச்சின் பேபி ஆகியோர்களும் இம்முறை இவ்வணிக்காக விளையாடவுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு மேலும் துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்றது. 

இவர்களுடன் சர்வதேச ரீதியில் தம்மை நிரூபித்துள்ள சகலதுறைவீரர்கள் ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான், ஆப்கனிஸ்தானின் முகமட் நபி,  கார்லோஸ் பிராத்வைற் போன்றோரும் உள்ளூரில் அதிரடிக்குப் பிரபலமான தீபக் ஹூடாவும் துடுப்பாட்டத்தில் பலம் சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 
எனவே சன்ரைசர்ஸ் அணி துடுப்பாட்டத்தில் வோர்னரின் இழப்பின் மத்தியிலும் கூட பலமிக்கதாகவே காணப்படுகின்றது.


இம்முறை களமிறங்கவுள்ள  சன்ரைசஸ் அணியில் ஏகப்பட்ட சகலதுறைவீரர்கள் காணப்படுகின்றனர். அவ்வகையில் இந்தியாவின் யூசுப் பதான், தீபக் ஹூடா, விபுல் ஷர்மா, மெஹ்டி ஹசன் ராணா இவர்களுடன் இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்தான், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், மேற்கிந்திய தீவுகளின் கார்லஸ் பிராத்வைற் ஆகியோர்களும் இம்முறை இவ்வணிக்காக விளையாட உள்ளனர்.
இது அணியின் சமநிலைத் தன்மையை சீராகப் பேண உதவும்.

கடந்த சீசன்களில் இவ்வணி கொண்டிருந்த சிறந்த வேகப்பந்துவரிசையை விட இம்முறை சிறந்த வேகப்பந்து பட்டாளத்தையே. கொண்டுள்ளார்கள் எனக் கூறும் அளவிற்கு வேகபந்துவீச்சாளர்கள் குவிந்து காணப்படுகின்றனர். பெரும் பலம் அனுபவமிக்க புவனேஸ்வர் குமார் தொடர்ந்தும் இம்முறை இவ்வணிக்காகவே விளையாடவுள்ளது தான். 
மேலும் சந்தீப் ஷர்மா, சிதார்த் கெளல், பசில் தம்பி, தமிழக வீரர் நடராஜன், இவர்களுடன் அவுஸ்ரேலியாவின் ஸ்டான்லெக் , மேற்கிந்திய தீவுகளின் கார்லஸ் பிராத்வைற், இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர்களும் சன்ரைசஸ் அணிக்காகவே விளையாடவுள்ளனர். எனவே சன்ரைசஸ் அணி இம்முறையும் வேகத்தில் மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சை பார்த்தால் T20 பந்துவீச்சுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆப்கானீஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் இம்முறையும் சன்ரைஸர்ஸ் அணிக்கே விளையாடவுள்ளார். இவருடன் சகலதுறைவீரரான வங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் முகமட் நபி, இந்தியவீரர் யூசுப் பதான் ஆகியோரும் உள்ளதால் சுழற்பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் அணி இம்முறை பலமானதாக உள்ளது.

சன்ரைசஸர்ஸ் அணி கடந்த சீசனில் பந்துவீச்சுவரிசையை பலமானதாக கொண்டிருந்தபோதிலும் துடுப்பாட்டவரிசை பலவீனமானதாக இருந்தால் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றமுடியாமல் போனது. இம்முறை இவ்வணிக்கு துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறைகளும் பலமானதாக காணப்படுகின்றது. எனினும் துடுப்பாட்டத்தில் கலக்கி, தலைமையையும் நேர்த்தியாகத் தாங்கிய டேவிட் வோர்னரின் வெற்றிடத்தை மற்றொரு வெளிநாட்டு வீரரான கேன் வில்லியம்சனால் சரியான சரியான முறையில் நிறைவேற்றக்கூடியதாக இருந்தால் இவ்வணியும் கிண்ணம் கைப்பற்றுவதற்கான கூடுதலான வாய்ப்புள்ளது.
இம்முறை விளையாடும் எட்டு அணிகளில் வெளிநாட்டு வீரர் ஒருவர் தலைமை தாங்கும் ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டுமே.

 உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் இந்த ஐபிஎல் சீசனுக்காக..


தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...