தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 29 மார்ச், 2018

SunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்

2018 IPL பருவகாலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக நியூ சீலாந்து அணியின் தலைவரும் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்குபவருமான கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பருவ காலம் போலவே இம்முறையும் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டேவிட் வோர்னர் பந்து சேதப்படுத்தல் - Ball Tampering விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காரணத்தால் இம்முறை விளையாட முடியாமல் போனதை அடுத்தே கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை இந்த அணியின் உப தலைவராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என சில மணி நேரத்துக்கு முதல் SunRisers Hyderabad ட்விட்டர் தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்து, அதனை புவனேஷ்வர் நன்றியுடன் ஏற்று பதிலும் அனுப்பியுள்ளார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...