தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 2 ஏப்ரல், 2018

அவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வரும் இங்கிலாந்தின் இளைய வேக நட்சத்திரம் #IPL2018

உபாதை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகிய அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதிலாக, இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டொம் கர்ரான் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான T20 போட்டியில் அறிமுகமான டொம் கர்ரான், இதுவரை ஆறு சர்வதேச T20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற போதிலும், டொம் கர்ரான் ‘டெத் ஓவர்’கள் என்றழைக்கப்படும் கடைசி சில ஓவர்களைக் கட்டுப்பாடாக வீசுவதில் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகின்றது.

ஸ்டார்க்கை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, இந்திய மதிப்பில் 9.4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. ஆனால் டொம் கர்ரானை எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறித்து இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் இல்லை.

டொம் கர்ரானும் அவரது சகோதரர் சாம் கர்ரானும் சேர்ந்து இங்கிலாந்தின் சர்ரே பிராந்தியத்தில் T20 போட்டிகளில் கலக்கியுள்ளார். அத்துடன் கர்ரான் ஓரளவு துடுப்பாடவும் கூடியவர் என்பது இன்னொரு விசேடம்.

கொல்கத்தா அணியில் ஏற்கெனவே மிட்செல் ஜோன்சனும் உபாதையுற்றுள்ள நிலையில் வினய் குமார் மற்றும் இளைய இந்தியப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அனுபவம் வாய்ந்த வீரராகவும், எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் ஸ்டார்க்கிற்கு பதிலாக 23 வயதான இளம் வீரரரை தேர்வு செய்துள்ள கொல்கத்தா அணியின் கணிப்பு வெற்றியளிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...