பநேற்றைய பெரிய, சாதனை வெற்றியைத் தொடர்ந்து இன்றிரவு இரண்டாவது T20 போட்டியிலும் இலகுவான வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் நாளைய போட்டி எஞ்சியுள்ள நிலையில் இன்றே தொடரை வென்றெடுத்துள்ளது.
பாபார் அசாம், புதிய வீரர் ஹுசைன் தலாத் ஆகியோரின் அசத்தலான துடுப்பாட்டம் மூலமாக 205 ஓட்டங்களை எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் ( இது நேற்றுப் பெற்ற எண்ணிக்கையை விட 2 ஓட்டங்கள் அதிகம்)
ஆமிர், ஷடாப் கான், நேற்று அறிமுகமான போட்டியிலேயே சகலதுறைத் திறமை காட்டி போட்டி நாயகன் விருதைப் பெற்ற தலாத் ஆகியோரின் பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகளை 123 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
ஆமிர், ஷடாப் கான், நேற்று அறிமுகமான போட்டியிலேயே சகலதுறைத் திறமை காட்டி போட்டி நாயகன் விருதைப் பெற்ற தலாத் ஆகியோரின் பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகளை 123 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
82 ஓட்டங்களால் அபாரமான வெற்றி.
தரப்படுத்தலில் முதலாம் இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக T20 போட்டிகளை வென்று வருகிறது.
சப்ராஸ் அஹ்மத் தலைமையில் பெற்றுக்கொண்ட 6வது தொடர் வெற்றி இதுவாகும்.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய பாபார் அசாம் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை எடுத்தார்.
ஹுசைன் தலாத் தனது இரண்டாவது போட்டியில் இன்று கன்னி அரைச்சதம் பெற்றார்.
ஹுசைன் தலாத் தனது இரண்டாவது போட்டியில் இன்று கன்னி அரைச்சதம் பெற்றார்.
பந்துவீச்சிலும் கலக்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆரம்பத்திலேயே மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வரிசையை ஷடாப் கான் தன் சுழல் மூலம் உருட்ட, மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளை இடை நடுவே அள்ளி எடுத்தார்.
பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணி நாளை இறுதிப் போட்டியிலாவது கொஞ்சம் போராட்ட குணத்தை வெளிப்படுத்துமா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
0 கருத்துகள்