அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பப்புவா நியூ கினி அணியும், அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.
படிப்படியாக சர்வதேசக் கிரிக்கெட்டில் முன்னேறிவரும் பப்புவா நியூ கினி அணிக்கு இதுவே முதலாவது உலகக்கிண்ணமாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் தகுதிகாண் போட்டிகள் மூலமாகவே இவ்விரு அணிகளும் தெரிவாகியுள்ளன.
இந்தத் தெரிவுச் சுற்றில் விளையாடும் அணிகளில் ஆறு அணிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கு தெரிவாகக்கூடிய நிலையில் இப்போது இவ்விரு பிரிவுகளிலும் அடுத்த மூன்று இடங்களில் உள்ள ஏனைய ஆறு அணிகளுக்கு வாய்ப்புள்ளது.
பார்க்க புள்ளிகளின் பட்டியல்
கென்யா, சிங்கப்பூர், பேர்முடா, கனடா, ஜேர்சி, நைஜீரியா ஆகிய அணிகள் தெரிவாகக்கூடிய வாய்ப்பை முற்றாக இழந்துள்ளன.
Play off போட்டிகள் மூலமாக அவற்றிலிருந்து இன்னும் நான்கு அணிகள் தெரிவாகும்.
இந்த ஆறு அணிகளும் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடன் மோதி அவற்றிலிருந்து நான்கு அணிகள் ஏற்கெனவே நேரடியாக தெரிவாகியுள்ள தரப்படுத்தலில் முதல் எட்டு அணிகளுடன் Super 12 சுற்றிலிருந்து T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடும்.
www.crickettamil.com
0 கருத்துகள்