Latest Updates

6/recent/ticker-posts

M.S.தோனி ஓய்வு !

 M.S.தோனி ஓய்வு !


இன்றிரவு 7.29இல் இருந்து தன்னை ஓய்வு பெற்ற வீரராகக் கருதிக்கொள்ளுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி ஒருநாள், T20 போட்டிகளில் ஆடி வந்திருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 18 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடவுள்ள தோனி, சென்னையில் இன்று ஆரம்பமான பயிற்சி முகாமில் பங்குபற்றியிருந்தார்.
இந்த அறிவிப்பு மூலம் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் தோனி ஓய்வு பெறுகிறார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பையடுத்து சில நிமிடங்களிலேயே அவரது தளபதியாகக் கருதப்படும், சென்னை சூப்பர் கிங்ஸில் அவரோடு சேர்ந்து நீண்ட காலம் விளையாடிவரும் சுரேஷ் ரெய்னாவும் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்