இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியுடன் 3 T20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது T 20 போட்டி நாளை மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் T 20 தொடரை தொடர்ந்து நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் க்றிஸ் ட்ரேமெய்ன் ஆகியோர் புதிய வீரர்களாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்