தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 18 ஜூலை, 2018

இங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ! ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி !

ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டமிழக்காத சதத்துடன் நேற்றைய லீட்ஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்றது இங்கிலாந்து.
ஜோ ரூட் அவரது 13வது ஒருநாள் சதத்தைப் பெற்றதன் மூலம் இங்கிலாந்து சார்பாக அதிக ஒருநாள் சதங்களைப் பெற்றவர் ஆனார். முன்னைய சாதனை மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக் 12 சதங்கள்.

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் லீட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரைத் தீர்மானித்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் மற்றும் அணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் அவ்வணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் சந்தித்த 7 தீர்மானம் மிக்க இறுதிப் போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்திருந்த நிலையில், நேற்று அந்த வரலாறு இங்கிலாந்து அணியால் தகர்க்கப்பட்டது.

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து பெற்றுள்ள தொடர்ச்சியான எட்டாவது ஒருநாள் தொடர் வெற்றி.
இந்தியாவின் தொடர்ச்சியான 9 ஒருநாள் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.இந்தத் தொடரில் இந்தியா அடைந்துள்ள தோல்வியே விராட் கோலியின் தலைமையில் இந்தியா கண்டுள்ள முதலாவது ஒருநாள் தொடர் தோல்வியாகும்.

இந்தியா துடுப்பாடியவேளையில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவருமே இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சாளர்கள் அடில் ரஷீத் மற்றும் மொயின் அலியின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர்.
ரஷீத்தின் சிறப்பான சுழல்பந்துவீச்சில் விராட் கோலி கூடத் தடுமாறி ஆட்டமிழந்தார்.

ரஷீத் 49/3
வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி 40/3

இங்கிலாந்து துரத்தியவேளையில் வெற்றி இலக்கை அடையும் ஓட்டங்களைப் பெறும் நேரம் தனது சதத்தையும் பெற்றார்.
அணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

சுழற்பந்து வீச்சில் மிரட்டிய அடில் ரஷீத் போட்டியின் சிறப்பாட்டக்காரர்.

தொடரின் நாயகன் - ஜோ ரூட்.
#ENGvIND

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...