சாதனைக்கு மேல் சாதனைகளுடன் சிம்பாப்வே அணியை நான்காவது தொடர்ச்சியான போட்டியில் இன்று வதம் செய்தது பாகிஸ்தான் அணி.
இதில் சில உலக சாதனைகள், இன்னும் சில பாகிஸ்தானின் தனிப்பட்ட சாதனைகள்..
தொடர்ச்சியாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் முதலாவது ஒருநாள் சர்வதேச இரட்டைச் சதத்தையும் பெற்றுக்கொண்டார்.
சிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கிய ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக், ஒரு நாள் போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுக்காக அதிகூடிய ஓட்டங்களை பகிர்ந்து உலக சாதனை படைத்துள்ளதுடன், தங்களது அணியின் அதிகூடிய ஒரு நாள் ஓட்டங்களை பதிவுசெய்யவும் உதவியுள்ளனர்.
12 வருடங்களாக நிலைத்திருந்த இலங்கை அணி படைத்த உலக சாதனை முதலில் முறியடிக்கப்பட்டது.
சதங்களைக் குவித்த இருவரும் 39.3 ஓவரில் இணைப்பாட்டமாக 287 ஓட்டங்களைபெற்று, இலங்கையின் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஆகியோர் கடந்த 2006ஆம்ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் பெற்றிருந்த 286 என்ற முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட உலக சாதனையை முறியடித்தனர்.
தொடர்ந்தும் பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள் விரைவாக உயர்த்தப்படஇமாம் உல் ஹக், 42 ஓவரில் தனது விக்கெட்டினை வெலிங்டன் மசகட்சாவிடம் பறிகொடுத்து, சாதனை இணைப்பாட்டத்துக்குமுற்றுப்புள்ளி வைத்தார்.
இமாம் உல் ஹக் 122 பந்துகளை எதிர்கொண்டு, எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி304 என்ற முதல் விக்கெட் இணைப்பாட்ட உலக சாதனையை பதிவுசெய்தது.
ஒரு நாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்காக அதிக ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற வரிசையில் தற்போது 304 ஓட்டங்களுடன் ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது.
இலங்கை அணியின் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஜோடி286 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணியின்டேவிட் வோர்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் 284 ஓட்டங்களுடன் மூன்றாவதுஇடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்களது இந்த இணைப்பாட்டம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட அனைத்து விக்கெட்டுக்களுக்குமான மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்ற சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
2015ஆம் ஆண்டு சிம்பாப்வேஅணிக்கு எதிரான உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியில் கிறிஸ் கெயில் மற்றும் சாமுவேல்ஸ் 372 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.
சச்சினும் டிராவிட்டும் 1999 உலகக்கிண்ணப் போட்டிகளில் 331 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
இதற்கு அடுத்த இடத்தை கங்குலி மற்றும் ட்ராவிட் ஜோடி பிடித்துள்ளது. இவர்கள் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 2ஆவது விக்கெட்டுக்காக 318 ஓட்டங்களை குவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாகவே ஃபக்கார் சமான் மற்றும் இமாம் உல் ஹக்ஆகியோரின் இன்றைய சாதனை ஓட்டம் பதிவாகியுள்ளது.
இவர்களது இணைப்பாட்ட சாதனையை தொடர்ந்து, பாகிஸ்தான் அணிதங்களது அதிகூடிய ஒரு நாள் ஓட்ட சாதனையை நிலை நாட்டியதுடன், ஃபக்கார் சமான், பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டியில் அதிகூடியஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் பதிவுசெய்துள்ளார்.
2010ஆம் ஆண்டு தம்புள்ளையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்குஎதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து385 ஓட்டங்களை பெற்றிருந்ததே பாகிஸ்தான் பெற்ற கூடுதல் ஒருநாள் சர்வதேச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய தினம் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 399 ஓட்டங்களை குவித்து, தங்களது சாதனையை புதுப்பித்துள்ளது. ஒரேயொரு ஓட்டத்தினால் 400 ஓட்டங்களை பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்த சாதனையுடன் ஃபக்கார் சமான் இன்று பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை சதம்அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும், அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.
சயீட் அன்வர் 1997ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 194 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், குறித்த ஓட்ட எண்ணிக்கையை ஃபக்கார் சமான் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட 9வது இரட்டைச் சதம் இதுவாகும். ஆறாவது வீரர் சமான் ஆவார்.
ரோஹித் ஷர்மா மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் சிம்பாப்வே அணியை 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கச் செய்த பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி அயர்லாந்து அணிக்கு எதிராக 2015இல் பெற்ற 255 ஓட்ட வெற்றியாகும்.
இன்றைய போட்டியில் ஷடாப் கான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதேவேளை சிம்பாப்வே அணியின் இரண்டாவது மோசமான தோல்வியும் இதுவாகும். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 272 ஓட்டங்களால் தோற்றதே சிம்பாப்வே அணியின் மோசமான தோல்வியாகும்.
முன்னாள் அணித் தலைவர்கள் உட்பட முன்னணி வீரர்கள் பலரும் சிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்த, ஊதிய விவகாரங்களால் மோதி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் மிகப் பலவீனமடைந்துள்ள சிம்பாப்வே அணி தொடர்ந்தும் மோசமான தோல்விகளைக் கொண்டுவருகிறது.

0 கருத்துகள்