தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Wednesday, July 18, 2018

சிம்பாப்வே 67 !! பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனையுடன்..

சிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்களுக்கு சிம்பாப்வே அணியை சுருட்டிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்களால் அபாரமான சாதனை வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் எதிரணியொன்றை சுருட்டிய மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கையை மூன்றே மூன்று ஓட்டங்களால் முந்திக்கொண்டு சிம்பாப்வே பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் 25.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

Lowest totals Pakistan has bowled out the opposition for in ODIs: 64 versus New Zealand in 1986 67 versus Zimbabwe today

மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் ஃபஹீம் அஷ்ரப் தனது மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் கன்னி ஐந்து விக்கெட் பெறுதியையும் பெற்றுக்கொண்டார்.
அஷ்ரப் - 22/5

பல காலத்துக்குப் பிறகு இந்தத் தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஜுனைத் கானும், யசீர் ஷாவும் பிரகாசித்திருந்தார்கள்.
ஜுனைத் கான் - ஐந்து ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்.
யசீர் ஷா - 7 ஓவர்களில் 10 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்.

வெற்றி இலக்கை 241 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து கடந்தது பாகிஸ்தான்.

அதிக பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்த பாகிஸ்தானின் சாதனை இதுவாகும்.
முன்னதாக 28 ஆண்டுகளுக்கு முதல் 1990இல் நியூசீலாந்து அணிக்கு எதிராக 206 பந்துகள் மீதமிருக்க வெற்றியைப் பெற்றதே பாகிஸ்தானின் சாதனையாக இருந்தது.

இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் தொடரையும் இப்போதே கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக ஃபஹீம் அஷ்ரப் தெரிவானார்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...