ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார்.
இந்திய அணித்தலைவர் விராட் கோலி இங்கிலாந்தின் சரே பிராந்தியத்துக்காக முதற்தர போட்டிகளில் விளையாடவுள்ளதனால் அவரது இடத்துக்கே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அனுபவம் வாய்ந்த ரோஹித் ஷர்மாவுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.
தனது அறிமுகப் போட்டியில் முச்சதம் பெற்ற பின்னும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காத கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்துக்காக விளையாடிவரும் செட்டேஸ்வர் புஜாராவும் பெயரிடப்பட்டுள்ளார். அவருடன் சசெக்ஸ் பிராந்தியத்துக்காக ஆடிவரும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி நடைபெறும் வாரத்தில் இவர்களது அணிகளுக்கான போட்டிகள் எவையும் இங்கிலாந்தில் இடம்பெறாததனாலேயே இவர்கள் இந்தப் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவுக்கும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஷர்தால் தாக்கூருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முழுமையான அணி விபரம் :
எதிர்வரும் ஜூன் மாதம் 14 முதல் 18 ஆம் திகதி வரை பெங்களூருவில் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இதன் மூலம் 12வது டெஸ்ட் அணி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

0 கருத்துகள்