முன்னதாக சென்னையிடம் தோற்றதற்கு நேற்று கொல்கத்தாவில் 61000 ரசிகர்களின் முன்னால் வைத்து பழிதீர்த்துக் கொண்டது சென்னை மைந்தன் கார்த்திக்கின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணிக்காக தோனி 43 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பியுஷ் சவ்லா மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர். அதிலும் நரைன் தனது 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண அணியின் வீரர் ஷுப்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியுடன் உதவியுடன் 17.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
கில் 57 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்ததுடன், சுனில் நரைன் 32 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
ஷுப்மன் கில்லின் முதலாவது IPL அரைச்சதம் இதுவாகும்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சன்ரைசஸ் அணி முன்னேறியுள்ளதுடன், சென்னை அணி 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை 4வது இடத்திலிருந்த கொல்கத்தா அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சென்னைக்கு மீண்டும் death overs என்று சொல்லப்படும் இறுதி ஓவர்களில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் தடுமாற்றம் பற்றிய சிக்கல் தோன்றியுள்ளது.
அத்துடன் நேற்றைய போட்டியில் சென்னை அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதனூடாக கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்திலிருந்த சென்னை அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.

0 கருத்துகள்