Latest Updates

6/recent/ticker-posts

துல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம் சேர்ந்த இலகு வெற்றி சன்ரைசர்ஸ் அணிக்கு - #IPL2018 #SRHvRR

நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது முதல் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அறிமுகமான கேன் வில்லியம்சனுக்கு அனைத்துமே சரியாக அமைந்தன.

அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசையாகத் தெரிந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை உருட்டி மடக்கிய SRH பந்துவீச்சுடன் முன் மாதிரியான வகையில் களத்தடுப்பில் ஈடுபட்டும் கலக்கினார் வில்லியம்சன்.
ரன் அவுட் ஆட்டமிழப்பு, ஒரு பிடி என்பவை வில்லியம்சனின் பங்களிப்பு. ரஷீத் கான் இரண்டு அபார பிடிகளை எடுத்தார்.

ஷகிப் அல் ஹசன் மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகள்.
ராஜஸ்தானின் முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள் ரஹானே, ஸ்டோக்ஸ், பட்லர், ஷோர்ட் என்று அனைவரும் சொற்ப ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, சஞ்சு சம்சன் 49 ஓட்டங்களை எடுத்தார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறக்கப்பட்ட சஹா விரைவாக ஆட்டமிழந்தாலும், ஷீக்கார் தவானும் அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் 121 ஓட்டங்களை அபார இணைப்பாட்டமாகப் பெற்று 9 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

தவான் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77.
வில்லியம்சன் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36.
இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் தவான் பெற்றுள்ள ஓட்டங்களே கூடிய ஓட்டங்கள்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ஷீக்கார் தவான்.

நாளை சென்னையில், தத்தம் முதல் போட்டிகளில் வெற்றியீட்டிய சென்னையும் கொல்கத்தாவும் மோதவுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்