சென்னையில் நடைபெறவிருந்த அத்தனை IPL போட்டிகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பூனேக்கு மாற்றியதனால் சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி வீரர்களும் கொஞ்சம் மனமுடைந்து சோர்ந்தும் போயுள்ளனர்.
எனினும் நாளை ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக பூனேயில் தங்கள் முதல் போட்டியை ஆரம்பிக்கஉள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு உற்சாகமான செய்தியை தமிழ்நாட்டில் உள்ள சென்னை அணி ரசிகர்கள் தந்திருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காக CSK முகாமைத்துவம் ஒழுங்கு செய்த இலவச Whistle Podu Express - விசில் போடு எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் பூனேக்கு புறப்படுள்ளது.
சென்னையிலுள்ள ரசிகர்கள் தமது அணி விளையாடும் போட்டியை காண ரயிலில் பூனே நோக்கி புறப்பட்டுள்ளனர். மைதானத்தில் இருப்பது போன்றே ஆரவாரத்துடன் ரயிலில் செல்லும் காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
மைதானம் முழுவதையுமே மஞ்சளாக மாற்றிக்காட்டுவோம் என்று பூனே செல்லும் சகல ரயில்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
CSK ரசிகர்களுக்கு இலவச ரயில் பயணம் மட்டுமன்றி, பூனேயில் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் காரணமாக அணியின் தலைவர் தோனி, முக்கிய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரை நாளைய போட்டியில் இழந்துள்ள சென்னை அணிக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
சென்னை G.பிரசாத்

0 கருத்துகள்